கொழும்பில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்
Colombo
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு 14 இல் அமைந்துள்ள தொட்டலங்க பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்று (31) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |