ஹங்வெல்ல கொலைச்சம்பவ முதல்கட்ட விசாரணை - காவல்துறைக்கு கிடைத்த முதல் தடையம்
ஹங்வெல்ல உணவக உரிமையாளரை கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த உந்துருளி ஹன்வெல்ல மெஹகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீதியில் விட்டுச் சென்ற நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உந்துருளி நிறுத்தப்பட்ட இடத்தை சுற்றிலும் மிளகாய் பொடியை தூவி கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணை
இதேவேளை, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, உந்துருளியின் செசி இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பன நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் உந்துருளியினை கண்டெடுத்த போது, அதன் இலக்கத்தகடும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட கடை உரிமையாளரின் சகோதரர் இதற்கு முன்னர் சில குழுவினரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார் எனவும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய காவல்துறையினருக்கு உதவியதன் காரணமாக குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
இதேவேளை, கொல்லப்பட்ட நபர் ஹங்வெல்ல காவல் நிலைய சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய ஹங்வெல்ல காவல்துறையினருக்கு மேலதிகமாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

