தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் - கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்றம்
தென்னிலங்கையின் வெவ்வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஹோமாகம, கொஸ்கொட மற்றும் கொட்டாவை பகுதிகளிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவை பகுதி துப்பாக்கி சூடு
இதேவேளை, கொட்டாவை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வருகை தந்த ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 52 வயதான நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பகுதி துப்பாக்கி சூடு
இதேவேளை, ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபரால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம நேத்தகம பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
