கொழும்பில் துப்பாக்கிச் சூடு - தவறுதலாக இலக்கான இளைஞன்
கொழும்பு தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு உண்மையான இலக்கு வேறு யாரோ என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தெஹிவளை ஆபர்ன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் தனது வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 19 நிமிடங்கள் முன்