தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு
தென்னிலங்கையில் வீடு ஒன்றின் அறையில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று (11) அதிகாலை ஹிரண காவல்துறை பிரிவின் மாலமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
மேலதிக விசாரணை
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
