யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல்
யாழ் வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியைக் களமாகக் கொண்டு குணா கவியழகனால் எழுதப்பட்டுள்ள “கடைசிக் கட்டில்” நூலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் கடந்த வாரம் கனடாவிலும் நடைபெற்றுள்ளது.
குறித்த நூலானது, போருக்குப் பின் அதிகரித்த புற்று நோய் குறித்து யாழ் (Jaffna) வைத்தியசாலை முறையான ஆய்வுகளைச் செய்யத்தவறியமை, அதற்கு அரசியல் காரணங்களும் அதிகார மோகமுமே காரணம் என்று குற்றம் சாட்டுகிறது
மரண ஆபத்துகள்
அதுமட்டுமல்லாமல், இந்த நூலானது வைத்தியசாலையின் முறைகேடுகளையும் போரில் பாதிப்படைந்த மக்களுக்கு நோய்த்தடுப்பு முன் நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதால் நிகழ்ந்த மரண ஆபத்துகள் பற்றியும் சாடுகிறது.
குறிப்பாக, அதிகாரத்திற்கும் அரசியலுக்கும் முன்னால் மக்களின் உயிர்கள் போரின் பின்னும் கூடப் பொருட்டல்ல, நல்லிணக்கம் என்பது போரில் வென்றவர்களை, அந்த நிலத்தைப் பார்வையிடும் சிங்கள மக்களின் சுற்றுலா அன்றி வேறில்லை எனவும் அதுவுங்கூட அரச ஆதரவுப் பணம் செலவு செய்யப்பட்டதாக இந்த நூல் கூறுகிறது.
போர் நிகழ்ச்சி
அந்தவகையில், கனடாவின் (Canada) மொன்றியலில் மற்றும் டொரொண்டோவில் (Toronto) நடந்த எழுத்தாளர் சந்திப்பில் பேசிய குணாகவியழகன் அரசாங்கத்தின் பின் போர் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சமாக இருப்பது போரில் தோற்கடிக்கபட்ட மக்களை போராட்டத்தில் தோற்கடிப்பதே என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் எழுத்தாளர் சந்திப்பில் பேசிய குணாகவியழகன், தமிழர் உரிமையின் ஆதாரமான தமிழரின் தாயகக் கோட்பாட்டையும் அதற்கான தகுதிக்குரிய பண்புகளையும் அழிப்பதே பின்- போர் நிகழ்ச்சித்திட்டம்.
அரச நிகழ்ச்சி
ஆனால் புலம் பெயர் அமைப்புகள் தமிழ் மக்களுக்கான ஒரு பின்- போர் நிகழ்ச்சித்திட்டதை உருவாக்கவில்லை மாறாக அவை இலங்கை அரச நிகழ்ச்சியின் ஒத்தோடி அரசியலை மறைமுகமாக ஆதரிக்கும் பண்பைக் கொண்டிருக்கின்றன.
மக்களை போராட்டப் பக்திக் கோசங்களால் மயக்குகின்றன. இதுவே இன்றைய உய்வில்லாத அரசியல் அழிவுக்கான ஆதாரக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
உண்மை அரசியல்
மேலும், மறைக்கப்பட்ட உண்மைக்கு எதிரான போராட்டமாக பின்- உண்மை அரசியல் என்ற கருத்தாக்க அடிப்படையில் தமிழர்களுக்கான பின்- போர் அரசியல் திட்டம் வகுக்கப்படுவது அவசியம்.
ஐந்நூறு வருடமாக அரசிழந்து வாழ்ந்தபோதும் ஈழ மக்கள் இன்று வரை தமது மொழியையும் அதன் வழியான தேசிய வாழ்வையும் இழக்காமல் நிற்கும் அதிசயம் சாதாரணமானது அல்ல.
எத்தனை ஓர்மையிருந்திருக்கும் இந்த அதிசயத்தைக் கட்டிக்காப்பதற்கு, அது இன்று அழியும் காலத்தில் இருப்பதை ஏற்க முடியாது, அரச மற்றும் அரச ஒத்தோடி அரசியலை அம்பலப்படுத்துவதோடு புதிய யுகத்திற்கான புத்தாக்கச் சிந்தனையோடு தேசிய இருப்புக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |