தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறை தகவல்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினால் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்காலை காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |