பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு!
பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேயங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம ரணசிங்க என்ற என்ற 81 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர் என்றும், நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து, உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை
தவிரவும், அவர் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததற்கு அமைய அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், துஷ்பிரயோகம் நடந்ததாக உறவினர்கள் சந்தேகிக்கும் நிலையில், அவர்களில் ஒருவர் கம்பஹா பிரிவு காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து மீரிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர், இதன் பொருட்டு திடீர் மரண விசாரணையாளர் துசித பிரமோத் விஜேயவர்தனவுடன் காவல்துறை குழுவொன்று சுடுகாட்டிற்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர், தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை மீரிகம காவல் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ஹெட்டியாராச்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |