தணியும் மத்திய கிழக்கு போர் : ஏழு பெண் கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேல் (Israel) - காசாபோர் (Gaza) நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் (Hamas) தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் இராணுவம் விடுதலை செய்துள்ளது என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று (25.01.2025) இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 200 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
ஹமாஸ் விடுதலை
இதேவேளை பணயக் கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் குழுவினர் இன்று விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை. இந்நிலையில், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பணயக் கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், அவர் வரும் சனிக்கிழமை(01.02.2025) விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |