காஸாவில் ஒளிந்துகொள்ள ஹமாஸிற்கு இடமே இல்லை : இஸ்ரேல் பிரதமர் சூளுரை
ஒக்டோபர் 7 தாக்குதலின் பின்னணியில் ஹமாஸ் அமைப்பினருக்கு "ஒளியும் இடம் இல்லை" என்றும், "காசாவில் இஸ்ரேல் இராணுவம் செல்லாத இடமில்லை" என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா அருகே உள்ள இராணுவ தளத்திற்கு வருகை தந்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
காசாவிற்குள் நுழைந்துவிட்டோம்
"நாங்கள் காசாவுக்குள் நுழைய மாட்டோம் என்று எங்களிடம் கூறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாங்கள் அதனை உடைத்துவிட்டோம். "நாங்கள் காசா நகரின் எல்லையை அடைய மாட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள் - நாங்கள் வந்துவிட்டோம்.
ஹமாஸின் கொலைகாரர்களுக்கு அடைக்கலம் இல்லை
நாங்கள் அல்-ஷிஃபாவில் நுழைய மாட்டோம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் - நாங்கள் நுழைந்தோம். “காஸாவில் நாம் அடையாத இடமில்லை, ஹமாஸின் கொலைகாரர்களுக்கு மறைவுமில்லை, அடைக்கலம் இல்லை, புகலிடம் இல்லை.
"நாங்கள் ஹமாஸை ஒழிப்போம், எங்கள் பணயக்கைதிகளை மீட்டு எடுப்போம். இவை இரண்டு புனிதமான பணிகள்." என மேலும் தெரிவித்தார்.