சீனாவிலிருந்து வரவுள்ள மற்றுமொரு ஆய்வு கப்பல் : என்ன செய்யப்போகிறது இந்தியா..!
Sri Lanka
India
China Ship In Sri Lanka
By Sumithiran
இலங்கை கடற்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளும் வகையில் மற்றுமொரு கப்பல் வருவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Xiang Yang Hong 03 எனும் கப்பலையே ஆய்வுக்காக சீனா அனுப்பவுள்ளது.
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காகவே இந்த கப்பலை சீனா அனுப்பவுள்ளது.
ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு
2024 ஆம் வருடம் ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு கப்பல்கள்
ஏற்கனவே சீனாவின் இரண்டு கப்பல்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் இலங்கைக்கு வந்த நிலையில் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பினை இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்தது.
தற்போது மூன்றாவது கப்பலும் இலங்கை வருவதற்கு சீனா அனுமதி கோரியுள்ள நிலையில் இந்தியாவின் எதிர்வினை எவ்வாறு அமையுமென கேள்வி எழுப்பப்படுகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்