காசா மருத்துவமனையின் அடித்தளத்தில் பதுங்கிய ஹமாஸ்: இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம் (காணொளி)
ஹமாஸ் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுடன் ஹமாஸ் படையினர் காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் பதுங்கியிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் நகரில் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களிடம் பேசிய போது சில புகைப்பட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரன்தீஸி மருத்துவமனை
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரன்தீஸி மருத்துவமனையை சோதனையிட்ட போது அங்கு ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்கொலைப் படையினருக்கான ஆயுதங்கள் வெடிகுண்டுகள், மற்றும் ஏகே.47 ரக துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் இராணுவம்
மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களும் கிடைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
EXCLUSIVE RAW FOOTAGE: Watch IDF Spokesperson RAdm. Daniel Hagari walk through one of Hamas' subterranean terrorist tunnels—only to exit in Gaza's Rantisi hospital on the other side.
— Israel Defense Forces (@IDF) November 13, 2023
Inside these tunnels, Hamas terrorists hide, operate and hold Israeli hostages against their… pic.twitter.com/Nx4lVrvSXH
இதனால் தற்போது ஒவ்வொரு மருத்துவமனையாக சோதனையிட்டு நோயாளிகளைப் பாதுகாத்து வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது