ஹமாஸ் அமைப்பின் தலைவரின் மகன் விமானத்தாக்குதலில் உயிரிழப்பு
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் மகன் ஹசெம் ஹனியே, காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் ஹஸெம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அரசுக்கு சொந்தமான சமூக ஊடக கணக்குகள் சனிக்கிழமை தெரிவித்தன.
போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில்
இதற்கிடையில், காசா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் இஸ்மாயில் ஹனியேவின் மகன்களில் ஒருவரான ஹஸெம் இஸ்மாயில் ஹனியே உயிரிழந்ததாக உள்ளூர் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தியை உறுதி செய்துள்ளன.
ஹமாஸ் தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழப்பு
பாலஸ்தீனிய இணையத்தளமான "www.elbalad.news" ஹஸெம் 22 வயதுடையவர் என்றும் கல்லூரி மாணவர் என்றும் கூறியுள்ளது.
கலீத் இஸ்மாயில் ஹனியே உட்பட ஹனியின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி