ட்ரம்பின் வருகை : பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராகும் ஹமாஸ்
ஹமாஸ் (Hamas ) அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க (United States) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திங்கட்கிழமை (20.01.2025) ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
பிணைக்கைதி
அதற்கு முன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல் (Israel) - காசா (Gaza) இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் வசம் உள்ளனர்.
இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது "வருகிற 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |