ஹமாஸுக்கு மீள முடியாத இழப்பு: இஸ்ரேலின் காசா தாக்குதலில் சரிந்த தலை!
ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்தெல்-லத்தீப் அல்-கனோவா (Abdel-Latif al-Qanoua) வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா நகரத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஜபாலியா அல்-பலாத் பகுதியில் அல்-கனோவாவின் கூடாரத்தைத் தாக்கியபோது அவர் உயிரிழந்ததாக ஹமாஸ் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
அதன்போது, இஸ்ரேல் அல்-கனோவாவை காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சில் செய்ததாக பாலஸ்தீனிய மக்கள் எதிர்ப்பு இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 18 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து, 830 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1787 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவ்வாறு காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழைந்தகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனியர்களின் கொலை
அத்துடன், இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கி வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்த பின்னர் சுமார் 124,000 பாலஸ்தீனியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் 2023 முதல் காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் கிட்டத்தட்ட 50,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 13,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
