இஸ்ரேலியர்களை கடத்தி வந்தால் பாரிய வெகுமதி : ஹமாஸ் அமைப்பின் அறிவிப்பால் அதிர்ச்சி (காணொளி)
இஸ்ரேலியர்களை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் அதற்கு ஈடாக இலட்சக்கணக்கில் பணம், வீடு வழங்குவோம் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு பேரை காசாவுக்கு கடத்தி கொண்டு வரமுடியுமோ
வீடுகளை காலி செய்து விட்டு, எவ்வளவு பேரை காசாவுக்கு கடத்தி கொண்டு வரமுடியுமோ அவ்வளவு பேரையும் கொண்டு வாருங்கள் என ஒரு ஹமாஸ் உறுப்பினர் கூறுகிறார்.
? YOU MUST WATCH THIS! ?
— Hananya Naftali (@HananyaNaftali) October 24, 2023
Captured Hamas terrorists ADMIT crimes against humanity!
"We were told whoever brings a hostage gets $10,000" #HamasTerrorists pic.twitter.com/9JyntYmwd3
காணொளியில், அவளுடைய நாய் வீட்டில் இருந்து வெளியே வந்தது. அதனை நான் சுட்டு கொன்றேன் என ஒரு உறுப்பினர் கூறுகிறார்.
இதேபோன்று மற்றொரு உறுப்பினர், அவளுடைய உடல் தரையில் கிடந்தது. அதனையும் நான் சுட்டேன். அதற்கு தளபதி என்னை நோக்கி கத்தி, கூச்சலிட்டார். சடலம் மீது சுட்டு, குண்டுகளை வீணடிக்கிறாயே என கூறினார் என்று காணொளியில் கூறுகிறார்.
வந்தவேலை முடிந்தது
ஹமாஸ் உறுப்பினர் ஒருவர் காணொளியில் கூறும்போது, எதற்காக நாங்கள் வந்தோமோ அதனை முடித்து விட்டோம். 2 வீடுகளை எரித்து விட்டோம் என கூறுகிறார்.
முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரை கொலை செய்யவும், கடத்தி வரவும் ஹமாஸ் அமைப்பு அறிவுறுத்தல்களை வழங்கிய தகவலை, கைதான அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அந்த காணொளி பதிவில் தெளிவாக பகிர்ந்து உள்ளனர்.
அந்த அமைப்பின் மூத்த தளபதிகள் பாதுகாப்பாக வீடுகளில் பதுங்கி கொண்டதுடன், ஆயுதமேந்திய நபர்களை போரிடவும், உயிரிழக்கவும் அல்லது இஸ்ரேலில் கைது செய்யப்படவும் அனுப்பி உள்ளதாக இஸ்ரேல் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.