ஹமாஸின் சுரங்கப்பாதைகளை நெருங்க முடியாமல் திணறும் இஸ்ரேல் படை
ஹமாஸ் அமைப்பால் காசா பகுதியில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமான சுரங்கங்களில் பெருமளவானதை இஸ்ரேலிய இராணுவத்திற்கு அணுக முடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா மீதான போர் அதன் நான்காவது மாத இறுதியை நெருங்கும் நிலையில், இஸ்ரேலிய இராணுவம் 20-40 சதவீத சுரங்கப்பாதையை சேதப்படுத்தவோ அல்லது செயலிழக்கச் செய்யவே முடிந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இணையம் தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதைகளை தகர்க்க
காசாவின் நன்னீர் விநியோகம் மற்றும் நிலத்தடி உள்கட்டமைப்பு மீதான தாக்கம் குறித்த கவலைகளை புறக்கணித்து, சுரங்கப்பாதைகளை தகர்க்க இஸ்ரேல் இதுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கு இன்னும் பல துருப்புக்கள்
ஹமாஸ் தலைவர்கள் தங்குமிடம் மற்றும் கைதிகளை வைத்திருக்கும் எஞ்சிய சுரங்கப்பாதைகளை அகற்ற இஸ்ரேலுக்கு இன்னும் பல துருப்புக்கள் தேவைப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.