ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகிக்கப்பட்ட இலட்சக்கணக்கான வாகனங்கள்!
2025ஆம் ஆண்டு மார்ச் முதல் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வழியாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 86,389 வாகனங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், 30,809 புதிய வாகனங்களும், 55,580 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 செப்டெம்பர் வரை மேலும் 81,180 வாகனங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், 25,018 புதிய வாகனங்களும், 56,162 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்
வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள சூழலிலும், வாகனப் போக்குவரத்தைப் பாதிக்கும் பல்வேறு தளபாடச் சிக்கல்கள் நிலவும் நிலையிலும், இறக்குமதியாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த குழுமம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL), ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் துரிதமான செயற்பாடுகள், நெகிழ்வான நடைமுறைகள் மற்றும் நடைமுறை ரீதியான ஆதரவைப் பாராட்டியுள்ளது.
450க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில், பெரிய நிறுவனங்கள் மட்டுமன்றி, நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வாகன இறக்குமதியாளர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
தேங்கியிருந்த வாகனங்கள்
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலத்தில், நீண்ட காலம் துறைமுகத்தில் தேங்கியிருந்த வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்களை இரத்துச் செய்யவும், பிற சலுகைகளை வழங்கவும் அந்த குழுமம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாகனங்களை விரைவாக விடுவிக்கவும், இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், வளைகுடா பிராந்தியத்தின் ஊடான வாகனப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட தடங்கல்களால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்காக, சேமிப்புக் கட்டணத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஒன்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |