மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்பு!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Batticaloa
By Bavan
மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர், ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று (13-05-2026) மாலையில் மீட்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
பொதுமக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து, மேற்படி குண்டை வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி