யாழில் கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
யாழ்ப்பாணத்தில் பாவனையின்றிய காணப்பட்ட கிணற்றில் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டுகள் யாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் நேற்று (26) காலை மீட்கப்பட்டுள்ளன.
கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்பட்ட கிணற்றினை இறைத்து துப்பரவு செய்த போதே இக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு
இந்த காணி யுத்தம் காரணமாக 35 வருடங்களாக பாவனையற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும், அண்மையில் அம்பாறை (Ampara) - சம்மாந்துறை (Sammanthurai) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடு ஒன்றில் கட்டட வேலைக்காக மண்ணை பயன்படுத்தும் போது கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் : இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி