யாழ் - கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரம் கையளிப்பு (படங்கள்)
Jaffna
Douglas Devananda
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம்(25)காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
காணி உரிமை பத்திரம்
நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், காணி மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் குணதிலக மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்