உங்கள் இல்லத்தின் ஒரு அங்கமாக 2026 இலும் உங்களுடன்...! ஐபிசி தமிழின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
திசைகள் எட்டிலும் சிதறி வாழ்ந்தாலும், ஐபிசி தமிழ் எனும் ஒற்றை இழையில் தமிழால் பிணைக்கப்பட்டிருக்கும் எமது அன்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
வெறும் செய்திகளைத் தரும் ஊடகமாக மட்டுமல்லாமல், உலகத்தமிழர்களின் உணர்வுகளைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு பெரும் சக்தியாக ஐபிசி தமிழ் இன்று உருவெடுத்துள்ளது.
தொலைந்து போன தாயக நினைவுகளுக்கும், தேடித் தவிக்கும் உறவுகளின் குரலுக்கும் ஒரு பாலமாக நாம் பயணிக்கும் இந்தத் தடம் அன்பால் செதுக்கப்பட்டது.
புத்தாண்டு வாழ்த்துகள்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் வாழ்ந்தாலும், உங்கள் வீட்டின் ஒரு அங்கமாக எங்களை ஏற்றுக்கொண்ட உங்கள் பேரன்பே எமது பலம்.
கடந்த கால வலிகள் கரைந்து போகட்டும், புதிய ஆண்டின் ஒவ்வொரு விடியலும் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைக்கட்டும்.

உண்மையை உரக்கச் சொல்லவும், எமது கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் இந்த 2026 ஆம் ஆண்டிலும் நாம் உறுதியுடன் பயணிப்போம்.
இந்த 2026 ஆம் ஆண்டு, உங்கள் இல்லங்களில் மங்கலமும், உள்ளங்களில் அமைதியும், வாழ்விலே நிமிர்வும் கொண்டு வரட்டும் என ஐபிசி தமிழ் குடும்பம் மனதார வாழ்த்துகின்றது.
வாழும் தமிழால் இணைவோம்....வளமான எதிர்காலத்தை நோக்கியே நடப்போம்...!
ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு : மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |