விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை : ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு
விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும் போது, அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அரச அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும் என்றும் அநுரகுமார வலியுறுத்தியுள்ளார்.
அரச சேவையில் இணைக்க அனுமதி
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு புதிதாக 62,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொடியாகல மற்றும் கெபிலித்த வனப்பகுதிகளின் எல்லை நிர்ணயம் காரணமாக விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளின் பிரச்சினை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
