அதிபர் -ஆசிரியர் சம்பள உயர்வு : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
இத தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க பிரதமர், “சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிபர்களின் சம்பளம்
மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தை மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் அது அப்படியல்ல. பாடசாலை அதிபர்களின் சம்பளம் 30,105 ரூபாயாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாயாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது இடம் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்பள்ளி கல்வியிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 6,019 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பிற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்