ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
சுகாதார ஆலோசனைகளின்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்சேவைகளும் இம்மாதம் (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 108 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் தயாராகிய நிலையில் இரண்டு வாரங்களுக்கு அந்த சேவையை ஒத்திவைக்குமாறு தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ரயில் சேவையைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்,இதற்காக போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக குருநாகல், பாணந்துறை மற்றும் வெயாங்கொட ரயில் நிலையங்களிலிருந்து அதிகப்படியான அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ரயில்களில் சுமார் 25,000 பேர் அமரும் திறன் உள்ளது. அந்த வரம்புகளுக்குள் நாங்கள் சேவையை வழங்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.