ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹெண்டிகே ஆகிய 3 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (28-07-2026) பிறப்பித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளில் சலுகை
இதன்போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டா என அறியப்படும் நடூன் சிந்தக்க விக்கிரமரத்னவின் மனைவியிடம் ரூபாய் 12 கோடி (120 மில்லியன்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) இவர்கள் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குவதற்கும், பூசா அதிஉயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்கும், அவருக்கு எதிரான விசாரணைகளில் சலுகைகளை அளிப்பதற்கும் வாக்குறுதி அளித்து இந்த லஞ்சப் பணம் பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |