யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)
தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று(9) மாலை நடைபெறவுள்ளது.
குறித்த இசைநிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, மற்றும் யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று(9) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த குழுவிற்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஹரிகரனின் இசை நிகழ்வு
குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா,நடன இயக்குனர் கலா மாஸ்டர்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆலியாமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்தது.
எனினும் அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பிற்போடப்பட்டு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - மாலை திருவிழா
