மனு தாக்கல் செய்தார் ஹரின் பெர்ணான்டோ
arrest
court
harin-fernando
By Vanan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், இன்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவுசெய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு கடந்த நாட்களில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்