நாடாளுமன்ற சம்பளத்தை அதிகாரப்பூர்வமாக துறந்தார் ஹரின்
PARLIAMENT
SALARY
HARIN
RENOUNCES
By Kanna
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது ஒரு வருட கால சம்பளத்தை உத்தியோகபூர்வமாக இன்று துறந்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி தனது பாராளுமன்ற சம்பளத்தை உத்தியோகபூர்வமாக கைவிடுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டார்.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர்களுக்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, எதிர்வரும் வருடத்திற்கான தனது பாராளுமன்ற சம்பளத்தை கைவிடுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்களின் ஊழியர்களாகிய நாம் நமது நாட்டின் நெருக்கடிகளை குறைக்க இந்த கடினமான காலங்களில் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி