பஸில் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ஸவுக்கு பகிரங்க சவால் விடுத்த ஹரின்
people
harin fernando
basil rajapaksha
By Shalini
ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை தியாகம் செய்யத் தயார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (1) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தற்போது தண்டனை அனுபவித்து வரும் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய நபர் எனவும் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்திற்கான உயர் பதவிக்கு பஸில் ராஜபக்ச மற்றும் சசீந்திர ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக போட்டியிடவும் அவர் சவால் விடுத்துள்ளார்.