நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமரின் அறிவிப்பு
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசியல் நோக்கங்களுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சில தரப்பினரால் வெளியிடப்படும் அறிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், எதிர்க்கட்சி உறுப்பினரால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளும் மற்றும் இலங்கை காவல் துறையும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்