பொது நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா
Parliament of Sri Lanka
Harsha de Silva
By Kanna
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று (23) நடைபெற்றது.
நிலையியற் கட்டளை இலக்கம் 121ற்கு அமைய அண்மையில் தெரிவுக் குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதற்கமைய 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் இக்குழுவில் ஆராயப்பட்டதுடன், அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனைவிட சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன் அதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி