சஜித் குறித்த செய்தியால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷ டி சில்வா!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அண்மைய இந்தியாவுக்கான விஜயம் தொடர்பான செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (10.11.2025) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் தொடர்பில் தானும், கட்சியில் உள்ள எவரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளக பிரச்சினை
சஜித் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதை தானும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் செய்தித்தாள்கள் மூலமே அறிந்துக் கொண்டதாகவும் ஹர்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தொடர்பு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை தொடர்பில் அரசியல் அரங்கில் விமர்சனங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |