கோட்டாபய அரசாங்கம் இத்தனை பில்லியன் கடன்களை 12 மாதங்களில் பெற்றுள்ளதா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தனது முதல் 12 மாத காலத்திற்குள் 2 ட்ரிலியன் ரூபா அதாவது 2000 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கடன் பணத்தைக் கொண்டு அரசாங்கம் என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 11.1% என அரசாங்கம் கூறுகின்ற போதும் உண்மையில் துண்டுவிழும் தொகை 14.1% என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் பொய் கூறி நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது. நல்லாட்சி அரசாங்கம் கடன் அதிகம் பெற்றதாக விமர்சனம் செய்தவர்கள் இன்று இரண்டு மூன்று மடங்கு அதிக கடன் வாங்கியுள்ளனர்.
இந்த கடன் தொகையில் அரசாங்கம் என்ன செய்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் வாங்கிய இக்கடன் தொகையானது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.