ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு...! தடைபட்ட போக்குவரத்து
ஹட்டன் மற்றும் கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வீதிகளில் சென்ற வாகனங்களும் குறித்த பகுதியை கடக்க முடியமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மண்சரிவு அபாயம்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்கள் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தூரப் பயணங்களை மேற்கொள்ளாதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |