மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சர்வதேச மகளிர் தினப் பேரணி! (படங்கள்)
மலையகப் பெண்களின் வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி உரிமையை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளில் மகளிர் தின பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஹட்டனில் நடைபெற்றுள்ளது.
ஆயிரம் ரூபா சம்பளம் என்ற போர்வையில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடு, மலையக பெண்களின் வாழ்வாதாராத்தினைப் பெற்றுக் கொடு, என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், சிவப்பு கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி ஹட்டன் கிருஷ்ண பகவான் மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், மகளிர் பிரிவிற்கான பொறுப்பளார் பி.புஷ்பலதா, பி. ரொஷானி, மொன்ரால் அமைப்பின் செயற்பட்டாளர் விமுக்தி த சில்வா, மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெண்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.












