இவரை கண்டீர்களா -மக்களிடம் உதவி கோரும் காவல்துறை
கண்டி வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்காக கடந்த முதலாம் திகதி சென்றவரை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மஸ்கெலியா காவல்துறை பிரிவின் கீழுள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட கெஸ்கிபன் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.வி.சோமதாச (வயது 84) என்பவரையே காணவில்லை என அவரது குடும்பத்தினர் மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தகவல்களை அளிக்க

கடந்த ஏழு தினங்களாக அவரை தேடிய போதும் அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் மகன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிய தருமாறும் அல்லது மஸ்கெலியா காவல் நிலையத்துக்கு அல்லது அவரது இல்லத்திற்கு அறிய தருமாறும் அவரது மனைவி பொது மக்களிடம் வினயமாக கேட்டுக் கொண்டனர்.
மஸ்கெலியா காவல் நிலைய இலக்கம் 052 2277222. குடும்ப அலைபேசி இலக்கங்கள் 0714 291 001, 0754 291 160 மற்றும் 0756 010 069.