அஞ்சல் தபால்தலைகளில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!
இலங்கை மக்களின் தனித்த புகைப்படங்களை வைத்து தபால்தலைகளை வெளியிடக்கூடிய வாய்ப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) முத்திரையை வெளியிடுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
சொந்த புகைப்படங்கள்
"இலங்கை தபால் திணைக்களம் மக்களுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய தபால்தலைகளை வடிவமைக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளது.
ஒரு தனிப்பட்ட தபால்தலைகளுக்கும் சுமார் 2000 ரூபா செலவாகும் என்பதனால் மக்கள் குறித்த தொகையை செலுத்தி அவர்களது புகைப்படம் அடங்கிய தபால்தலையை பெற்றுக்கொள்ள முடியும்.
அஞ்சல் முத்திரைகள்
மேலும், திருமணங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப 20 முத்திரைகள் கொண்ட முத்திரைத் தாளையோ அல்லது தமது சொந்த புகைப்படங்களையோ பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்பத்தினர் இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் திருமண அட்டைகளின் தனித்துவத்தை அதிகரிக்கலாம்." என்றார்.
தவிரவும், தம்பதிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள முத்திரைகளை அஞ்சல் முத்திரைகளாகவும் செயற்படுத்தலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |