குளியறையில் வெட்டப்பட்ட யுவதியின் தலை -பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்கள்

Death Investigation Police Colombo
By Vasanth Mar 04, 2021 04:04 PM GMT
Report

கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் தலையில்லா சடலம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி குறித்த யுவதியை அவரது காதலனான புத்தல பொலிஸ் உத்தியோகத்தர் பிரேமசிறி, தனது தாக்கி கொலை செய்துள்ளதுடன், ஹங்வெல்ல விடுதியின் குளியலறையில் அவரது தலையை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் கழுத்திலுள்ள காயங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த யுவதி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஹங்வெல்ல விடுதியின் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர். இதன்படி, விசேட இரசாயண பதார்த்தமொன்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, குளியலறையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியிலும், குளியலறையின் ஏனைய சில இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த யுவதி தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஹங்வெல்ல நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு சென்ற சந்தேகநபர், 6250 ரூபா பெறுமதியான பயணப் பையொன்றை கொள்வனவு செய்துள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று, குறித்த யுவதியை கொலை செய்வதற்கான கத்தியை, சந்தேகநபர் ஹங்வெல்ல பகுதியிலேயே கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர்கள் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார். பயணப் பையில் யுவதியின் உடல் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யுவதியின் தலை பகுதியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த நபர், தனது கையில் கொண்டு செல்லும் பையிலேயே, யுவதியின் தலை இருந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

டாம் வீதியில் பயணப் பையை கைவிட்டு செல்லும் போது, அவரது கையில் பையொன்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபர் வீட்டிற்கு செல்லும் போது, அவரது கையில் எந்தவொரு பையும் இருக்கவில்லை என சந்தேகநபரின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சந்தேகநபர், யுவதியின் தலையை ஏதேனும் ஒரு இடத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். எவ்வாறாயினும், யுவதியின் தலையை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நீர்வேலி, கொழும்பு, Pickering, Canada

20 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026