கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு (Election Commission) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த உத்தரவுகளை செயற்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L.. Rathnayake) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
