அல்சரால் அவஸ்தைப்படுபவர்களா? இனி கவலையும் வேண்டாம் - மருந்துகளும் வேண்டாம்! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்

Fruits Women Foods Healthy Men body weight Peptic ulcer Diodinal ulcer
By Chanakyan Dec 13, 2021 07:26 AM GMT
Report

அல்சர் (Ulcer) என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்கள் மிகவும் கொடூரமாக வலியை ஏற்படுத்தும். இதில் வயிற்றில் உருவாகும் புண்கள் பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்றும், சிறுகுடலில் உருவாகும் புண்கள் டியோடினல் அல்சர் (Diodinal ulcer) என்றும் அழைக்கப்படுகிறது.

வயிறு மற்றும் சிறுகுடலில் உருவாவதற்கு காரணம் வயிற்றிற்கு மேலே உள்ள சளியின் அடர்த்தியான லேயர் குறைவது தான். இருப்பினும், ஏற்கனவே சளி லேயர் மெல்லியதாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவை உண்ணாமல் இருக்கும் போது செரிமான அமிலங்கள் வயிற்றுத் திசுக்களை உண்ண ஆரம்பித்து, அல்சரை உண்டாக்குகின்றன. 

ஆய்வுகளானது ஹெலிகோபாக்டர் பைலோரி (எச்.பைலோரி) என்னும் ஒரு பாக்டீரியா தொற்று தான் வயிற்றுப் புண்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகின்றன.

எனவே அல்சர் இருக்கும் போது, அதற்கான மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர, ஒரு குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் விரைவில் அல்சரை குணப்படுத்தலாம். அதுவும் பழங்களை சாப்பிடுவது இன்னும் நல்லது. ஆகவே அல்சர் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள் என்னவென்பதை இப்போது காண்போம். 

ஸ்ட்ரோபெர்ரி

ஸ்ட்ரோபெர்ரி வயிற்றுப் புண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி - ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ரோபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

அப்பிள்

தினமும் அப்பிள் சாப்பிட்டால் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக அப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் அப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது அப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும். 

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும். 

மாதுளை

வயிற்றுப் பிரச்சினைகள் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை செரிமான பிரச்சினைகளால் ஏற்படுகிறது. மாதுளையின் தோலில் உள்ள புனிகலஜின்ஸ் வயிற்றுப் பிரச்சினைகளுக்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம். 

முலாம் பழம்

முலாம் பழத்தில் விட்டமின் சி ஏராளமாக உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சினைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் முலாம் பழம் உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சினைகளையும் தடுக்கிறது.

பலாப்பழம்

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சினைகள சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

இது பைல்ஸ் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது ஆராக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. 

சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம். 

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இரைப்பை நோய்க்குறி மற்றும் ஹைப்பர் குளாரிஹைட்ரியாக்கு நிவாரணம் அளிக்கிறது மற்றும் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற இரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது.

இதற்கு இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். மேலும் நெல்லிக்காய் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது.


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026