யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்ப்பாணம் (jaffna) - இணுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 3 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணுவில் (Inuvil) பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜனால் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு
இதனை தொடர்ந்து, மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில், குறித்த உணவக உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தம் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று 25 ஆயிரம் , 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என மூவருக்கும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |