மெனிங்கோகோகல் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்
Ministry of Health Sri Lanka
By Kathirpriya
கடந்த ஒரு வருடமாக அரசாங்க வைத்தியசாலைகளில் மெனிங்கோகோகல் நோய்க்கான தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாக தற்போது 88 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.
காலி சிறைச்சாலையில்

இந்த 88 தடுப்பூசிகளில் அரச மருத்துவமனைகளில் 6 தடுப்பூசிகளும், மருத்துவப் பொருட்கள் பிரிவில் மிகுதி 82 தடுப்பூசிகளும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் மெனிங்கோகோகல் நோயினால் காலி சிறைச்சாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியதை தொடர்ந்தே இந்த விடயங்கள் பேசப்படுகிறது.
பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த செய்தி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.