மக்களே அவதானம்..! நாட்டில் மீண்டும் தலை தூக்கும் நோய்த்தாக்கம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயத்தை இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட (Chamil Muthuguda) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக பலர் சுற்றுலா சென்றுள்ளனர்.
நுளம்புகள் பெருகும் இடங்கள்
இதனால் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் வாய்ப்பு காணப்படாததால் அவை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் ஒரே நுளம்பால் பரவுகின்றன.
இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
