மீண்டும் முடங்கும் இலங்கையின் சுகாதாரத்துறை : உபுல் ரோஹன எச்சரிக்கை
சுகாதாரத்துறையின் ஊழியர்களால் எதிர்வரும் 16 ஆம் திகதி பாரிய பணி விலகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எனினும், மக்களின் நாளாந்த சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் வைத்தியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவார்கள் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையின் சுகாதாரத்துறையில் காணப்படும் நெருக்கடிகள் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் பல அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுகாதாரத்துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள பணி விலகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பணி விலகல் ஆர்ப்பாட்டம்
இதேவேளை, கடந்த 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட பணி விலகல் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : பயங்கரவாதிகள் தொடர்பான வதந்தியை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |