அமீனியா குறைபாட்டினை தவிர்க்க எவ்வாறான உணவுகளை எடுக்க வேண்டுமென்று தெரியுமா
நம் உடலில் பல்வேறு வகையான இயக்கங்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமானதாகும்.
ஹீமோகுளோபின் உற்பத்தி செய்வதில் தொடங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது, நம் உடலுக்கு வலுவூட்டுவது போன்ற நடவடிக்கைகளில் இரும்புச்சத்தின் பங்கு பிரதானமாக இருக்கிறது.
இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் நமக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை குறைபாடு உண்டாகக் கூடும்.
இதை தடுக்க வேண்டும் என்றால் இரும்புச்சத்து கொண்ட உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து கொண்ட சுவையான உணவுகளும் இருக்கின்றன. அதற்கு முன்னதாக, நம் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
மிக கடுமையான சோர்வு மற்றும் பலவீனம், சருமம் வெளிறிப்போய் காணப்படுவது, இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது, உள்ளங்கை மற்றும் பாதங்களில் குளிர்ச்சி, தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி, நகங்களில் வெடிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
பருப்புகள்
நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒன்றாக பருப்பு வகைகள் உள்ளது. சமைப்பதற்கு எளிமையான பருப்புகளில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது.
ஒரு கப் அளவிலான வேக வைத்த பருப்புகளில் 6.6 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச்சத்து கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சியா விதைகள்
இரும்புச்சத்து உள்பட நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் இதில் உள்ளன. 100 கிராம் அளவுக்கு சியா விதைகளை எடுத்துக் கொண்டால் அதில் 7.7 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
வறுக்கப்பட்ட சியா விதைகளை ஸ்நாக்ஸ் போல எடுத்துக் கொள்ளலாம்.
உலர்ந்த ஆப்ரிகாட்
ஒரு சுவைமிக்க ஆரஞ்சு மிட்டாயை நினைவுப்படுத்துவதைப் போலவே, உலர்ந்த ஆப்ரிகாட் பலத்தின் தோற்றமும், சுவையும் இருக்கும்.
100 கிராம் அளவுக்கு பழங்களை எடுத்துக் கொண்டால் அதில் 2.7 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
தண்டுக்கீரை விதைகள்
கீரையின் சுவை பிடிக்காதவர்கள், தண்டுக்கீரையின் விதைகளை எடுத்துக் கொள்ளலாம். கடுகு வடிவில் இருக்கும் இந்த விதைகளில் இரும்புச்சத்து அபரிமிதமாக உள்ளது.
நாம் சமைக்கும் பிற உணவு வகைகளில் இந்த கீரை விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
முந்திரி
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது. மொறுமொறுப்பான சுவை கொண்டது.
முந்திரி பருப்புகளில் இரும்புச்சத்து மட்டுமல்லாமல் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக முந்திரி பருப்புகளை எடுத்து கொள்ளலாம்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்