வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா....
தற்போது இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பொருத்தமான உணவுகளை உண்பது சிறந்தது.
அந்தவகையில் கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
தர்பூசணி
இது கோடை காலத்தில் உடலை நீரேற்றம் செய்யும் ஒரு உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன.
மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன .அத்துடன் தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.
தக்காளி
கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாதுகாப்பை தேட முடியும்.
தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும்.
ஏனெனில் இது லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.
முலாம் பழம்
கோடை கால ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது.
எனவே ஆரோக்கியமான சுவையான கோடை கால உணவாக முலாம் பழம் விளங்குகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது.
பெரி
ஸ்ட்ரோபெரி, ப்ளு பெரி, ப்ளாக் பெரி என அனைத்து வகையான பெரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன.
ஸ்ட்ரோபெரி மற்றும் ப்ளுபெரி இரண்டு அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ப்ளாக் பெரி மற்றும் ரோஸ் பெரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இனிப்பு சோளம்
கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். நீங்கள் அதை வேகவைத்தாலும் க்ரில் செய்தாலும் அது இனிப்பு சுவையிலேயே இருக்கும்.
மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. அத்துடன் இது உங்கள் கண்களை வெயில் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.
அவகாடோ
உங்கள் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு உணவாக அவகாடோ உள்ளது. ஏனெனில் அவகாடோ கொழுப்பு, போலெட் மற்றும் பைபர் ஆகியவற்றை கொண்ட சுவையான மூலமாக உள்ளது. கூடுதலாக அவை இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
