இதய நோய் யாரை அதிகம் தாக்கும் தெரியுமா..! கவனத்தில் கொள்ள வேண்டிய ஆன்மீக பரிகாரம்
- உலகில் 80% மரணங்கள் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது.
-
80% இதய நோய்களைத் தடுக்க முடியும்
-
கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு
இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் தீவிரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர்பாராத நேரத்தில், சில சமயங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.
உடல் ஓய்வெடுத்தாலும் கண் மூடி உறங்கினாலும் ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கும் உறுப்பு இதயம். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கூட இன்றைக்கு இதய நோய் வருகிறது. மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர். நோய்க்கு மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நோய் எதனால் வந்தது அதற்கு ஏதாவது ஆன்மீக பரிகாரம் உள்ளதா என்று ஜோதிடரையும் இன்றைய காலத்தில் பார்க்கின்றனர்.
ஜோதிட பரிகாரங்கள்
இதய நோய்க்கு ஜாதக ரீதியாக ஏற்படும் காரணங்கள் என்ன? அதற்கான ஜோதிட பரிகாரங்கள் இருக்கின்றனவா என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கார்டியோவாஸ்குலர் நோய்கள் என குறிப்பிடப்படும் இதயம் சார்ந்த நோய்கள் கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. மிகவும் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது தான் மேலும் கவலைக்குறியதாக இருக்கிறது. மார்பக வலி , தாடையில் அல்லது பின்பக்கம் வலி, காரணம் இல்லாத களைப்பு அல்லது சோர்வு, மூச்சுத்திணறல், இருமல், மயக்கம், திடீர் கால் வீக்கம் அல்லது நீர் சேர்வது ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள்.
இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. உடல் எடை அதிகமாகிறது, கூடவே மன அழுத்தமும் ஏற்படுகிறது. குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இளம் வயதினர் மத்தியில் இதயநோய் என்பது அதிகரித்தபடியே உள்ளது. உலகத்தில் 80% மரணங்கள் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது. இந்தியாவில் 30% பேர் இதய நோயால் மரணம் அடைகின்றனர். ஆனால், 80% இதய நோய்களைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மை. இப்போது முதியவர்கள் மட்டுமில்லாது இளைஞர்களுக்கும் இதய நோய் ஏற்படுகிறது. உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம். ஆரோக்கியமானதை மட்டுமே சமைத்துச் சாப்பிட வேண்டும். உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம்.
இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
கிரகங்களின் இணைவு
நவ கிரகங்களில் சூரியன்தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரகங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். பொருளாதார திட்டமிடல், சிக்கனம்,சேமிப்பு இல்லாமை ,அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு அடிவாங்கியிருக்கார் அதாவது நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கார்னு சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் 4ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும். கடகம், சிம்மம் ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும். இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதய பாதிப்பு உள்ளவர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் இதயத்தில் படும் வகையில் வேல் உருவ டொலர் கழுத்தில் போடலாம். தாமிரத்தில் வேல் உருவ டொலர் செய்து கழுத்தில் அணிய இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது.
ஜோதிட ரீதியாக பரிகாரம் செய்யும் அதே நேரத்தில் இதய நோய்க்காக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதும் அவசியம். உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதய நலன் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம் என்று இதய நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
