ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்! சூடுபிடித்த வாக்குவாதம் (காணொளி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு நாள் விவாதத்தின் போது தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
பிள்ளையான் ஒரு கொலைக்காரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதையடுத்து, இரு தரப்பினருக்கிடையிலான வாக்குவாதம் சூடு பிடித்துள்ளது.
திரிப்பொலி பிளட்டூன் விவகாரம்
திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி என சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை பார்த்து பைத்தியக்காரன் என்றும் பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான் எனவும் கூறியிருந்தார்.
அதேவேளை, சாணக்கியனின் தோற்றத்தை கிண்டலடிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத நிலை காணப்படுவது நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தை தொடர்ந்து உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.