இரணைமடு பகுதியிலுள்ள மக்களிற்கு வெள்ள முன்னெச்சரிக்கை
புதிய இணைப்பு
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிளும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று 28.11.2025 காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
மற்றும் கனகாம்பிகை குளமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது. கல்மடு குளம் தனது கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகள் வாழும் மக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
முதலாம் இணைப்பு
மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக இடங்களில் வீதி வெள்ள நீரால் தடைபட்டுள்ளது.

எனவே அப்பாதை ஊடாக பயணம் செய்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் (தேக்கம்) 16.'9' அடியை தாண்டி உள்ளதாலும் நாச்சதுவ குளத்தின் பாதுகாப்பு கருதி மேலும் வான் கதவுகள் திறக்கப்பட இருப்பதனாலும் மல்வத்து ஓயா ஆற்றங்கரை ஓரத்தில் தாழ் நிலப் பகுதியில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - நயன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்